search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்ஜ் அணிந்து நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர்.
    X
    பேட்ஜ் அணிந்து நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர்.

    தஞ்சை மாவட்டத்தில் 1,000 அரசு டாக்டர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம்

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் இன்று பேட்ஜ்அணிந்து போராட்டம் நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் நடந்த போராட்டத்தில் 300 மருத்துவ மாணவர்கள் மற்றும் 200 டாக்டர்கள் பங்கேற்றனர். இன்று முதல் வரும் 3-ந்தேதி வரை இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர்.

    இதுகுறித்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறுகையில்;

    வருகிற 5-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தமிழக அரசு மருத்துவ கூட்டு நடவடிக்கை குழுவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பது. வருகிற 20-ந்தேதி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடக்கிறது. 27-ந்தேதி ஒத்துழையாமை இயக்க போராட்டம் நடத்தப்படும். மேலும் அன்று வகுப்புகளை புறக்கணிப்பது. அரசுக்கு மருத்துவமனை பதிவுகளை அனுப்பாமல் முடக்குவது. இந்திய கவுன்சில் ஆய்வை புறக்கணிப்பது. வருகிற செப்.12-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தப் படும். செப்.21-ந்தேதி பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார். இந்த பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்துக்கு தமிழக அரசு மருத்துவ கூட்டு நடவடிக்கை குழுதலைவர் டாக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ரா£ஜந் திரன், பொருளாளர் டாக்டர் வினோத் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 1000 டாக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×