search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி அருகே பள்ளி வேன்-மினி பஸ் மோதல் - 20 மாணவர்கள் காயம்
    X

    திருத்தணி அருகே பள்ளி வேன்-மினி பஸ் மோதல் - 20 மாணவர்கள் காயம்

    திருத்தணி அருகே பள்ளி வேன்-மினி பஸ் மோதலில் 20 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இன்று காலை ஆர்.கே.பேட்டை, மத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது.

    குமரகுண்டா அருகே வந்த போது வங்கனூரில் இருந்து மத்தூர் நோக்கி வந்த மினி பஸ் திடீரென பள்ளி வேன் மீது மோதியது. இதில் வேன்-பஸ்சின் முன்பகுதிகள் நொறுங்கியது. வேனில் இருந்த 20 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்த மாணவ- மாணவிகள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×