search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    கோத்தகிரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

    கோத்தகிரியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை கோத்தகிரியில் நடத்தினர். காமராஜ் சதுக்கம் அருகில் உள்ள கிரின்வேலி மெட்ரிக் குலேசன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த இந்த முகாமை பள்ளி தாளாளர் பிரசாந்த் கிருஷ்ணன், முதல்வர் ஜெயராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஐ.ஓ.எல். லென்ஸ் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் தேவையானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில் அறிவுரை கூறப்பட்டது. சர்க்கரை நோய் விழித்திரையை பாதிப்பதால் திடீரென பார்வை இழப்பு ஏற்படலாம், கண் நீர் அழுத்த நோய் 40 வயதிற்கு மேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கண்பார்வை பாதிக்கும்.

    குழந்தைகளின் மாறுக்கண்ணை அலட்சியம் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மட்டுமே மாறுக்கண்ணை சரிசெய்து இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும். கண்ணீன் கருவிழியில் புண் ஏற்பட்டு கருவிழி பாதிக்கப்பட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். கவன குறைவினால் கண்ணையே இழக்க நேரிடலாம். இவ்வாறு அறிவுரை கூறப்பட்டது.

    முகாமில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


    Next Story
    ×