search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
    X

    ராமநாதபுரத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

    ராமநாதபுரத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார வள மையத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.
    ராமநாதபுரம்:

    முகாமை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தொடக்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் 85 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

    சென்னையில் ஏற்கனவே பயிற்சி பெற்ற 8 ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர்.இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

    இது குறித்து ஆசிரியர் பயிற்றுநர் உலகராஜ் கூறியதாவது:-

    தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தில் கியூ.ஆர். கோடு உள்ளது. இந்த கியூ.ஆர். கோடினை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தி அகன்ற திரையில் பாடங்கள், கதைகள், பாடல்களைக் காண்பித்து பாடம் நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில் 85 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இவர்கள் 85 பேரும் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி களைச் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

    ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இரு நாள்கள் வீதம் மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×