search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    ஜெயங்கொண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    ஜெயங்கொண்டம் பகுதியில் கடைக்காரர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிகடைகளில் பிளாஸ்டிக்பைகளின் பயன்பாட்டை வியாபாரிகள் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சங்கர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

    நேற்று நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி பகுதியில் கடைவீதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டபோது 25 கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் ஜெயங்கொண்டத்தில் சுற்றுச்சூழல் மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால், வணிகர்கள், சில்லரை வியாபாரிகள், தங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டது.

    எனவே தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரில் 50 மைக்ரானுக்கு குறைவாக, ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கடைகாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டது. மேலும் கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் போது வேடிக்கை பார்த்த பொது மக்களிடமும் பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பின்னர் அவ்வாறு கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பைகள், பாலித்தீன் விரிப்புகள், பிளாஸ்டிக்கப்புகள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×