search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டங்குழியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
    X

    குட்டங்குழியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

    ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பாக குட்டங்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
    திருவட்டார்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பாக குட்டங்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வின்ஸ்எல்ஜின் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்வின் ஜெயக்குமார், திருவட்டார் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாவட்ட செயலாளர் வக்கீல் ஜாண்இக்னேசியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட செயலாளர் திருவட்டார் மோகன்தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×