search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41.16 லட்சம் மதிப்பில் கொளப்பள்ளி முதல் அம்மன்காவு வரை முடிக்கப்பட்ட 3 கி.மீ சாலை பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.81.40 லட்சம் மதிப்பில் வெட்டுவாடி ஜங்சன் முதல் குன்னி வரை முடிக்கப்பட்ட 1 கி.மீ சாலை பணியினையும், அடிச்சல் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் 300 சதுர அடி பரப்பில் ரூ.10.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 கோழிப்பண்ணைகளையும், நிலாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் நிலாக்கோட்டை முதல் போர்டு காலனி வரை ரூ.6.70 லட்சம் மதிப்பில் 120 மீட்டர் முடிக்கப்பட்ட சாலை பணியினையும்,

    சேரங்கோடு ஊராட்சி வெட்டுவாடி பகுதியில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பில் 5 வீடுகள் கட்ட ஆணைகளையும், போர்டு காலனி பகுதியில் ரூ.10.50 லட்சம் மதிப்பில் 5 வீடுகள் கட்ட ஆணைகளையும், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட போர்டு காலனி பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.25.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 15 வீடுகளையும் ஆக மொத்தம் ரூ.1.86,36,000- மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், மோகன் குமாரமங்கலம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×