search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைரோடு அருகே கிணற்றுக்குள் விழுந்த 5 காட்டு எருமைகள்
    X

    கொடைரோடு அருகே கிணற்றுக்குள் விழுந்த 5 காட்டு எருமைகள்

    கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் கிணற்றுக்குள் விழுந்த 5 காட்டு எருமைகளில் ஒரு எருமை பரிதாபமாக இறந்தது.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ராஜதானிக்கோட்டை சிறுமலை அடிவாரத்தில் வெள்ளிமலை என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு உள்ளது, தண்ணீர் இல்லாமல் வறண்டு, செடி கொடிகள் வளர்ந்தும் கிணறு இருப்பதை தெரியாத அளவில் இருந்தது. இந்த கிணறு 30 அடி ஆழம் கொண்டதாக உள்ளது.

    சிறுமலையில் இருந்து தண்ணீர் தேடி வந்த 5 காட்டெருமைகள் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த காட்டெருமைகள் மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி கொண்டு இருந்தது. கிணற்றுக்குள் காட்டெருமை சத்தம் போட்டு இருந்தது. அதை கேட்ட இப்பகுதி மக்கள் வந்து கிணற்றை பார்த்தனர். உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்,

    அதனைத் தொடர்ந்து சிறுமலை வனசரக அலுவலர் சங்கரன், வனவர் ராஜு, வன காப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றில் பள்ளம் தோண்டி வைத்து அந்த காட்டெருமைகளை வெளியே வரழைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்த காட்டெருமைகள் வெளியே ஏறி வந்தன, அதில் 4 காட்டெருமை வனபகுதி நோக்கி வேகமாக ஓடிவிட்டது. ஆனால் ஒரு காட்டெருமை கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து நடந்து செல்ல முடியவில்லை, காலில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வந்தது. ஆனால் அந்த காட்டெருமை பரிதாபமாக இறந்தது.

    Next Story
    ×