search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாடாலூரில் மக்கள் சேவை இயக்கம் நூதன போராட்டம்
    X

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாடாலூரில் மக்கள் சேவை இயக்கம் நூதன போராட்டம்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அதனை கண்டுக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊட்டத்தூர் பிரிவுச் சாலையில் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த ஒரு மாதமாக அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்தும், நரேந்திர மோடி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் சேவை இயக்கத்தின் அகில இந்திய தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் ஊட்டத்தூர் பிரிவுச் சாலையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி பேசுபவர்களை திசை திருப்பி சதி செய்து பேச விடாமல் தடுப்பதை காண்பிக்கும் வகையில் வாயை மூடியும், காது கொடுத்து கேட்பவர்களை திசை திருப்பி கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை கண்டிக்கும் வகையில் காதை அடைத்தும், விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியும் இவ்வளவு துன்பப்படுகிறார்களா என பார்ப்பவர்களையும் பார்க்க விடாமல் செய்யும் வகையில் நடந்து கொள்ளும் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்ணை மூடும் வகையிலும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

    ஊருக்கு சோறு கொடுக்கும் உழவனின் சாபத்தை வாங்கி கொண்டு டெல்லியில் போராடும் விவசாயிகளை போலி விவசாயிகள் என கொச்சைப்படுத்தியவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும் எனவும் போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

    போராட்டத்தில் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், பாடாலூர் விவசாயப் பிரிவு செயலாளர் சுப்ரமணியன், பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரவுச் செயலாளர் செல்வராஜ், திருச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் மகேஸ்வரி செல்வராஜ், பாடாலூர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
    Next Story
    ×