search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ராணுவத்தில் பெண்கள்
    X

    ராணுவத்தில் பெண்கள்

    பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியைப் பெறுவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
    பல திருப்பங்களுக்குப்பின் இந்திய ராணுவத்தில் பெண்களின் இடம் குறித்த பிரச்சினை பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது சாதகமாக கையாளப்பட்டு உள்ளது.

    நாடு முழுவதும் பயணம் செய்யும்போது ராணுவத்தில் நிரந்தரமான பணிக்காக பல்வேறு பின்னணிகளில் இருந்து பெண்களின் பெருங்குரலை ஒருவரால் கேட்கமுடியும். மிகக்குறைவான பிரிவுகளில் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக நிரந்தரமான பணிகளுக்கு பெண்கள் பரிசீலிக்கப்படுவது உண்மையாகும்.

    பெண்கள் விரக்தி அடைவதற்கு ராணுவத்தின் சுருக்கமான நிலையைப் பார்க்கும்போது இந்தப் பிரச்சினை சிக்கலானதாகவும், ஒப்பீட்டு முறையிலும் எப்படி இருக்கிறது? என்பதை ராணுவத்தின் சுருக்கமான நிலையால் காண முடிகிறது. இதன்மூலம், விரிவான தொலைநோக்குப் பார்வையைப் பெறலாம். தெளிவுக்காகப் பார்த்தால், மருத்துவ மற்றும் செவிலியர் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை இந்த விவாதத்திற்கு வெளியே வைக்க வேண்டும்.

    2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தரப் பணி என்பது ஏற்புடையதாக இல்லை. அந்த ஆண்டிலிருந்து ராணுவ கல்விப் படையிலும், நிர்வாகப் பிரிவிலும் மட்டுமே பெண்கள் நிரந்தரப் பணியை விரும்பினார்கள். 2017-ம் ஆண்டுவரை இந்த இரண்டு பிரிவுகளிலும் 83 பெண்கள் நிரந்தரப் பணிக்கு எடுக்கப்பட்டார்கள்.

    இதுதொடர்பான இந்திய விமானப்படையின் கடந்த இருபதாண்டுகால அனுபவம் வேறுவிதமாக உள்ளது. பொருத்தப்பாட்டையும், விருப்பத்தையும் பொறுத்து நிரந்தர பணிக்கான தேர்வு 2006-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட அனைத்து ராணுவ ஊழியர் தேர்வு ஆணையர்களின் விருப்பமாக இருந்தது. அதன் பிறகு, நிரந்தரப் பணிக்கான நிதி நிறுத்தப்பட்டது.

    எனவே, 2006-ம் ஆண்டு வரை 338 பெண்கள் மட்டுமே நிரந்தரப்பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் நிர்வாகம், ஏரோனாட்டிகல் பொறியியல் மற்றும் மின்னணுவியல், தடவாளங்கள், கணக்கு பிரிவுகளில் இருந்தனர். 2010-க்குப் பிறகு இந்திய கடற்படையும்கூட நிரந்தர பணிக்கான அனுமதியை நிறுத்திவிட்டது.

    பல பெண் அதிகாரிகள், ஆண்களோடு பெண்களுக்கும் சம உரிமை தரப்படவேண்டும் எனக் கோரி நீதிமன்றங்களை அணுகினார்கள். நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முப்படைகளும் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருந்தன. நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பை கேட்ட பிறகு பாதுகாப்பு அமைச்சகம் அதற்கு அடுத்த நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது அல்லது குறிப்பிட்ட சில விஷயங்களில் உத்தரவை பின்பற்றியது.



    பிரபலமான பபிதா புனியா வழக்கில் ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அரசின் நடைமுறை கொள்கைக்கு முரணாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இருப்பினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை வழங்கவில்லை. இதன் காரணமாக பல பெண்கள் தங்களின் பணியில் (ராணுவ ஊழியர் தேர்வாணையத்தின் கால நிர்ணயம் முடிவடைந்த பின்னரும்) நீடிக்கும் நிலை உருவானது. இருப்பினும், அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.

    எனவே, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியைப் பெறுவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    விமர்சனம் செய்வதில் பேரார்வம் கொண்ட சிலர், பிரதமர் எதையும் புதிதாக சொல்லவில்லை என்று கூறினார்கள். வேறு சிலரோ அவர் தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கெல்லாம் நேர்மாறாக கொள்கை நிலையை அறிவித்ததன் மூலம் குழப்பமான சூழலை பிரதமர் அகற்றி இருக்கிறார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கொள்கைக்கு தொடர்ச்சியாக அவர் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார்.

    விமானப்படையில் பெண் விமானிகள் ஏற்கனவே சாதனைப் படைத்திருக்கிறார்கள். கப்பல் படையில் தாரிணியில் பயணம் செய்தவர்கள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். தற்போது நாட்டின் உயர்நிலை நீதிமன்றத்தில் மூன்று பிரபலமான நீதிபதிகள் உள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் நான்கு அமைச்சர்கள் உள்ளனர். பிரதமர் தலைமையிலான இந்தக் குழுவில் 50 சதவீதம் பெண்களாவர்.

    ‘ரக்க்ஷாபந்தன்’ நேரத்தில் இந்த சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் செய்திருப்பதன் மூலம் இந்தியாவிலுள்ள பெண்களுக்கு சிறந்த பரிசை வழங்கியிருக்கிறார். தன்னம்பிக்கையுடனான இத்தகைய போராட்டத்தால் பெண்கள் இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக மட்டுமே அரசின் நடைமுறை உள்ளது.

    நிர்மலா சீதாராமன், ராணுவ மந்திரி,
    இந்திய அரசு
    Next Story
    ×