search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எள்ளோதரை செய்வது எப்படி
    X

    எள்ளோதரை செய்வது எப்படி

    எள்ளோதரை பொடியை செய்து வைத்து கொண்டால் தேவைப்படும் போது சாதத்தில் இந்த பொடியை சேர்த்து கிளறி பரிமாறலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு எள் - 200 கிராம்,
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
    காய்ந்த மிளகாய் - 12,
    உப்பு - தேவைக்கு,
    வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கருப்பு எள், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

    நன்றாக ஆறியதும் வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    தேவையான போது வடித்த சாதத்தில் இந்தப் பொடியை கலந்து, சிறிது நல்லெண்ணெய், வேர்க்கடலை, உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

    சூப்பரான எள்ளோதரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×