search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான கொள்ளு உருண்டைக்குழம்பு
    X

    சூப்பரான கொள்ளு உருண்டைக்குழம்பு

    உடலில் உள்ள கொழுப்பை குறைக்க அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு உருண்டைக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 1 கப்,
    துவரம் பருப்பு - 1/2 கப்,
    கடலைப்பருப்பு - 1/2 கப்,
    பூண்டு - 10 பல்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - சிறு துண்டு,
    கடுகு - 1 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
    சின்ன வெங்காயம் - 15,
    தக்காளி - 1,
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    [பாட்டி மசாலா] மல்லித்தூள் - 2 தேக்கரண்டி,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - பொரிப்பதற்கு, தாளிப்புக்கு.



    செய்முறை :

    சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    கொள்ளை 5 மணி நேரம் ஊறவிடவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற விடவும். மூன்றையும் ஒன்றாகக் கலந்து பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரை மாவில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, சிறிது காய்ந்த எண்ணெய் அல்லது சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மல்லித்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் கரைத்த புளியை ஊற்றி கொதிக்கும் போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிது நேரம் கழித்து முதல் உருண்டை வெந்து மேலே வந்தபின் அடுத்ததை போடவும். எல்லா உருண்டைகளையும் போட்டு அவை வெந்து மேலே வநதபின் தீயை அணைக்கவும்.

    கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    குறிப்பு


    1. புதிதாக சமைப்பவர்கள் உருண்டைகளை நேராக குழம்பில் சேர்க்கத் தயக்கமாக இருந்தால் எண்ணெயில் பொரித்து சேர்க்கலாம்.
    2. பருப்பு கலவையுடன் கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை துருவி சேர்க்கலாம்.
    3. குருமாவிலும் இந்த காய்கறி, கொள்ளு பருப்பு உருண்டைகளை போடலாம். உருண்டைகளை பொரித்து பரிமாறு முன் குருமாவைச் சேர்த்தால் போதும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×