search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மசாலா தேப்லா
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மசாலா தேப்லா

    சர்க்கரை நோயாளிகள் தினமும் சப்பாத்தியாக சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு மசாலா சேர்த்து தேப்லா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கோதுமை மாவுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    இதனுடன் வெது வெதுப்பான தண்ணீரை விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு கெட்டியாக பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சற்று கனமான ரொட்டிகளாக தேய்க்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த ரொட்டிகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

    மூன்று நாட்கள் கெடாது.

    தக்காளி, காரச் சட்னியுடன் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×