search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அரிசி மாவு கீரை ரொட்டி செய்வது எப்படி
    X

    அரிசி மாவு கீரை ரொட்டி செய்வது எப்படி

    கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். இன்று இந்த அரிசி மாவு கீரை ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    அரிசி மாவு - கால் கிலோ, 
    கீரை - ஒரு கட்டு (ஏதாவது ஒரு கீரை), 
    வெங்காயம் - 1, 
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - தேவைக்கு
    ப.மிளகாய் - 1, 
    மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், 
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை: 

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், [பாட்டி மசாலா] மிளகு தூள், ப.மிளகாய், உப்புடன் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும். 

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான அரிசி மாவு கீரை ரெடி.

    குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×