search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான காலை டிபன் முட்டைக்கோஸ் சாண்ட்விச்
    X

    சத்தான காலை டிபன் முட்டைக்கோஸ் சாண்ட்விச்

    நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் சாண்ட்விச் சாப்பிடுவது நல்லது. இன்று முட்டைக்கோஸ் வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
    சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
    வெண்ணெய் - சிறிதளவு
    தக்காளி சாஸ் - 4 டீஸ்பூன்
    கோதுமை பிரட் துண்டுகள் - 8
    வெங்காயம் - 1
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முட்டைக்கோஸை மிகப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நீரில் கழுவியபின்பு இதனோடு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இட்லி தட்டுகளில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயம், முட்டைகோஸ், தக்காளி சாஸ்,
    [பாட்டி மசாலா]  சீரகத்தூள்,
    சில்லி சாஸ் போட்டு சிறிது வெண்ணெய் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும். 

    ஒரு பிரட் துண்டின் நடுவில் இந்த கோஸ் கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

    முட்டைக்கோஸ் சாண்ட்விச் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×