search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு சத்தான பச்சைப்பயறு துவையல்
    X

    தோசைக்கு சத்தான பச்சைப்பயறு துவையல்

    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பச்சைப்பயறு துவையல். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப்பயறு - அரை கப்,
    பூண்டு - ஒரு பல்,
    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
    தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 5,
    புளி - கோலி அளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    வெறும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பச்சைப்பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும்.

    அனைத்தும் ஆறியபின், மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    சூப்பரான சத்தான பச்சைப்பயறு துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×