search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நரம்புகளை பாதிக்கும் காரத்தன்மை உள்ள உணவுகள்
    X

    நரம்புகளை பாதிக்கும் காரத்தன்மை உள்ள உணவுகள்

    அதிகமாக காரத்தன்மை உள்ள உணவுகளும் நரம்புகளை பாதிக்கும். எதிலும் நிதான முறையே சிறந்தது. உடலின் தன்மைக்கேற்ப அவரவர் உணவில் மருத்துவ அறிவுரை பெற்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
    Acidity - அமிலத்தன்மை, Alkaline- காரத்தன்மை இவை இரண்டிற்கும் சமநிலை உங்கள் உடலில் இருப்பதனை PH(Potential of Hydrogen) என்று கூறப்படுகின்றது. பல காரணங்களால் மனித ரத்தம் அதிக அமிலத்தன்மை அல்லது குறைந்த அமிலத் தன்மை உடையதாக ஆகலாம். இதற்கு ஒருவரின் உணவு முறையும் ஒரு காரணம். மேலும் உங்கள் உடல் உறுப்புகள் எந்த அளவு கார்பன் டை ஆக்ஸைட் வடிகட்டும் திறனை பெற்றுள்ளது என்பதனை பொறுத்தும் அமையும். PH சம நிலை உங்கள் உடல் உள்ளிருந்து அமையும் என்றாலும் ஆரோக்கியமான பழக்கங்களின் மூலம் இதனைப் பெற முடியும்.

    PH-ன் அளவு 0--14 PH அளவு குறையும் பொழுது அதிக அசிடிக் அதாவது அமிலத்தன்மையானதாக உள்ளது என்றும் PH அளவு கூடும் பொழுது அல்கலைன் தன்மை உடையதாக உள்ளது என்றும் கொள்வர். சமநிலை PH என்பது நீருக்கு 7.0 என்றும், உடலின் ஆரோக்கியமான சமநிலை 6.0-7.5 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

    7.35-7.45 அல்கலைன் தன்மை உடையதாகவும் இது உடல் செயல்பாடுகள் சீராக செயல்பட உதவுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. பலருக்கு அதிக ஆசிட் தன்மை உடையதாக இருப்பதால் பல உடல் பாதிப்புகள், இருதய பாதிப்பு, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள், எலும்புகள் எளிதில் தேய்ந்து விடுதல் போன்றவை ஏற்படுகின்றன. ரத்தத்தில் அதிக ஆசிட் கூடும் பொழுது சிறுநீரகமும், நுரையீரலும் பாதிக்கப்படுகின்றது.

    அல்கனைட் அளவு ரத்தத்தில் கூடும் பொழுதும் சதை துடிப்பு, பிடிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக ஆசிட் தன்மை பொருந்திய உணவினை எடுத்துக் கொள்ளும் பொழுது மனஉளைச்சல், தலைவலி, முகப்பரு, வறண்ட சருமம், ஜீரணம் சரியின்மை, எளிதில் உடையும் நகம், தலைமுடி, ஈறுகள் பாதிப்பு ஏற்படுகின்றது. செல்களின் செயல்பாட்டு சக்தி குறைகின்றது. கிருமிகளும், வைரஸ்களும் அமிலத் தன்மையில்தான் அதிகம் பரவுகின்றன.

    அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கும் பொழுது அதனை சரி செய்ய அதிகம் கால்ஷியம் சத்து தேவைப்படும். இதனை உடல் எலும்புகளிலிருந்து செய்யும் பொழுது எலும்பு தேய்மானம் ஏற்படும். கார்டிஸால் ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். தூக்க முறையினை பாதிக்கும். ஆசிட் சிறுநீரக கற்களை உருவாக்கும் வளர்ச்சி ஹார்மோனை குறைக்கும், உடலில் கொழுப்பினை அதிகரித்து சதை வலுவினைக் குறைக்கும்.

    ஆசிட் தன்மையினை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகளைத் தவிர்த்தாலே PH அளவு சீராக நம் உடலில் இருக்கும். அதிக சீஸ், அதிக வெண்ணெய், பல மருந்துகள், அதிக காபி, பாட்டிலில் காற்று அடைக்கப்பட்ட பானங்கள், மது, அதிகமாக செயற்கை வைட்டமின்கள் பயன்படுத்துதல் இவற்றினைத் தவிர்க்க வேண்டும்.

    அதிகமாக ஆல்கலைன் (காரத்தன்மை) உள்ள உணவுகளும் நரம்புகளை பாதிக்கும். எதிலும் நிதான முறையே சிறந்தது. உடலின் தன்மைக்கேற்ப அவரவர் உணவில் மருத்துவ அறிவுரை பெற்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

    சீரான PH அளவினை பெற:

    0-14 என்பதனை PH அளவு கோலில் குறிப்பிடுகின்றனர். 7-7.45 என்ற அளவில் நமது PH அளவு இருந்தால் மிக நல்லது. 7-க்கு கீழே செல்லும் பொழுது ஆசிட் தன்மை அதிகரிக்கின்றது. நம் உடலே முயன்று இதனை சரி செய்ய முற்படும் ஆயினும் ஆசிட் தன்மை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பொழுது உடலின் நலம் பாதிக்கப்படுகின்றது.

    PHLitmus Paper(PH லிட்மஸ் பேப்பர்) என்ற சோதனை பேப்பர் துண்டுகள் மருத்துவ கடைகளில் கிடைக்கும். இவை எதில் பட்டாலும் அதன் PH தன்மையினை காட்டும்.

    ஆசிட் தன்மை - சிகப்பு நிறம்.
    அல்கலைன் தன்மை - நீல நிறம்.
    சமநிலை - ஊதா நிறம்

    இந்த பேப்பரை வாங்கி உங்கள் சலைவா (எச்சில்) அதில் படும்படி செய்தால் மாறும் நிறத்தினைக் கொண்டு உங்கள் உடலின் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

    பொதுவில் 75 சதவீதம் அல்கலைன் உணவாகவும், 25 சதவீதம் அசிடின் உணவாகவும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் சத்தே இல்லாத ஆசிட் உணவுகளான சோடா, மிட்டாய்கள், அதிகம் சலிக்கப்பட்ட கோதுமை உணவுகள், மைதா இவற்றினை அகற்றி விடுவது மிகவும் நல்லது.
    ஆனால் ஆசிட் உணவு வகைகளை அடியோடு தவிர்ப்பதும் கூடாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

    அல்கலைன் சத்து அதிகம் கொண்ட உணவுகள் சில.

    * காபேஜ், * பீட்ரூட், * காலிப்ளவர், * ப்ரோகவி, * செல்லரி, * வெள்ளரி, * பூண்டு, * முள்ளங்கி, * வெங்காயம், * பச்சை பட்டாணி, * உருளை, * பசலை, * எலுமிச்சை, * தக்காளி, * சோயா, * பாதாம், * பூசணி விதை, * ஜீரகம், * சோம்பு, * எள், * காய்கறி ஜூஸ், * பட்டை, * இஞ்சி. ஆசிடிக் சத்து அதிகம் கொண்ட உணவுகள் சில.

    * அசைவம், * பால், பால் சார்ந்த உணவுகள், * வெள்ளை பிரட், பிஸ்கட், * வெண்ணெய், * செயற்கை இனிப்பு, * வெள்ளை சர்க்கரை, * காற்றடைக்கப்பட்ட குளிர் பானங்கள், * காபி, * பால் * சர்க்கரை சேர்த்த பழஜூஸ், * முந்திரி, * வேர்கடலை, * பிஸ்தா, * டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
    ஆக நம் உடலின் தன்மையினை அறிந்து உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். 
    Next Story
    ×