search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உண்ணக்கூடிய தங்கத்தில் அலங்கரிப்பு செய்யப்படும் உணவுகள்
    X

    உண்ணக்கூடிய தங்கத்தில் அலங்கரிப்பு செய்யப்படும் உணவுகள்

    தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது.
    தங்கம் உலகம் முழுவதும் அனைவராலும் விலை மதிப்புமிக்க உலோகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நகைகள், பண சேமிப்பு, பல் மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், விண்வெளி என பல துறைகளில் தங்கத்தின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வந்துள்ளது. அதுபோல் தற்போது தங்க இலைகள் (அ) பவுடர் போன்றவை உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது. இதற்கென பயன்படுத்தப்படும் தங்கம் என்பது 24 காரட் உண்ண கூடிய தங்க இலைகள் (அ) தகடுகள் என்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் வெள்ளி ரேக் என்பது உணவில் பயன்படுத்தப்பட்டன. அதுபோல் தங்க லீப் என்றவாறு உணவில் மேற்புற அழகை வெளிப்படுத்தும் வகையில் பூசப்பட்டு தரப்படுகின்றன.

    உண்ணக்கூடிய தங்க இலை

    உண்ணக்கூடிய தங்க இலை தங்க ரேக் (அ) இலை என்பது பெரும்பாலும் உணவுகளின் மீது அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், ஐஸ்கிரீம், டெரெட், கப்கேப் போன்றவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தங்க இலைகள் தூய்மையான தங்கத்தில் மெல்லிய அளவில் அதாவது காகித தடிமனின் சுழற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனை முற்றும் உண்ண கூடிய தங்க இலையாக உள்ளது. நமது உடல் செரிமான திறனுக்கு ஏற்றவாறு செரிக்கும் திறன் கொண்டுள்ளதால் இதனை சாப்பிட பயப்பட வேண்டியதில்லை. இதற்கென உள்ள விற்பனை பெட்டிகள் மீது உண்ணக்கூடியது (மீபீவீதீறீமீ) என்று பொறிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    சிறு துகள்கள் மற்றும் காகிதம் போல் மெல்லிய வடிவில் கிடைக்கும் இந்த உண்ணக்கூடிய தங்க இலைகள், தங்க பிளேக்கல்கள் என்பது தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் பலவற்றில் கிடைக்கின்றன. சில உணவகங்கள் தங்க ரேக் பதித்த உணவுகளை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. E 175 என்ற வாறு குறியீடு கொடுக்கப்பட்டு உள்ள உணவு பொருளாக தங்க இலைகள் உள்ளன.



    தங்க இலை மேற்பூச்சுடன் சில உணவுகள்

    மேற்கத்திய நாடுகள் விரும்பி உண்ணும் சில பிரபல உணவுகள் அதிக விலையுள்ளவாறு உண்ணக்கூடிய தங்க இலை மேற்பூச்சு மற்றும் முற்றிலும் தங்க இதழ் சுற்றப்பட்ட உணவுகளாக விற்பனைச் செய்யப்படுகின்றன. அவ்வப்போது உணவகங்கள் மக்களை கவர்ந்திழுக்க பெரிய அளவிலான காட்சி தங்க உணவுகளை தயாரித்து தருகின்றன. சில உணவகங்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவுகளின் மீது சிறு அளவு தங்க இலை அழகுபடுத்தபட்டவாறு உணவுகளை தருகின்றன.

    நியூயார்க் நகரில் 666 யூரோ மதிப்புள்ள 6 தங்க இதழ் சுற்றப்பட்ட விலை உயர்ந்த பர்கர்-யை தயார் செய்து தந்தது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பிட்சாவில் தங்க இதழ் அலங்கரித்து டோரோண்டா நகர உணவகம் கடந்த சில வருடங்களாக விற்பனையே செய்து வருகிறது. இதன் விலை 108 யூரோ ஆகும்.

    ஒவ்வொரு நாட்டின் சில பிரபல உணவுகள் பல தங்க இதழ் பூச்சுடன் விற்பனைக்கு வருகின்றன. அதாவது சுஹி, பேஜல், லாஸாங்கனா, பேகன், கேன், காப்போசீனா, காட் பெர்ரி சாக்லேட், நம்மூர் தோசை என பல ரகங்கள் தங்க ரேக் பூசப்பட்ட உணவுகளாக விற்பனைக்கு வருகின்றன. இதனை உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உண்ணக்கூடிய தங்க இலைகள் பல நிறுவனங்களில் உணவுகளுடனும், தனிப்பட்ட தங்க பிளேக்களாகவும் விற்பனைக்கு தருகின்றன. அவற்றின் தரம் மற்றும் உண்மை தன்மை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    இந்தியாவில் சில நட்சத்திர ஹோட்டல்களில் தங்க ரேக் அலங்கரிப்புடன் சில உணவு வகைகள் விழா காலங்களின் போது சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன. ஆடம்பர உணவில் ஆர்வம் கொள்பவர்கள் வீட்டிலேயே கூட தங்க இலை பிளேர் உணவுகளை தயார் செய்து சாப்பிட முடியும். 
    Next Story
    ×