search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சீபுரம் கருட சேவை
    X

    காஞ்சீபுரம் கருட சேவை

    காஞ்சீபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவைத் திருவிழா நடைபெறுகிறது.
    காஞ்சீபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவைத் திருவிழா நடைபெறுகிறது. வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டிற்கு மூன்று முறை கருடோற்சவம் நடைபெறுகிறது.

    அவை வைகாசி மாதம் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவையும், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வாரின் சாற்று முறையன்று நடைபெறும் கருடசேவையும், ஆடி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச கருடசேவையும் ஆகும். இவற்றில் வைகாசி மாதம் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருடசேவைதான் சிறப்பானது. அதிகாலை நான்கு மணிக்கே அத்திகிரி வரதனின் ஆலயக் கதவுகள் திறக்கப்பெற்று கருட சேவையைத் தரிசிக்கலாம்.

    தங்கக் கருடனின் மீது சிறப்பான அலங்காரத்துடன் பெருமாள் எழுந்தருளி ஒரு மணி நேரம் மண்டபத்தில் கருடசேவை சாதிக்கும் பெருமாள் ஐந்து மணிக்கு ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு சந்நிதியிலும் எழுந்தருளுகிறார்.

    அரைமணி நேரத்திற்கெல்லாம் எல்லா சந்நிதிகளிலும் எழுந்தருளியதும் கோபுரவாயில் நோக்கி பெருமாளை சுமந்து செல்கின்றனர். தங்கக் கருடனின் மீதமர்ந்த பெருமாளைத் தூக்கி வரும் அன்பர்கள் கருடன் தன் இறக்கைகளை அசைத்து பறப்பதுபோல் அசைத்து அசைத்து தூக்கி வருகிறார்கள். பெருமாளின் கருடசேவை கோபுர வாயிலை அடைகிறது.

    அதுவரை பட்டர் ஒருவர்தான் நேராகப் பிடித்திருந்த குடையைச் சற்றே சாய்த்துப் பிடிக்கிறார். இது தொட்டையாசாரியார் சேவை எனப்படும். அதன் வரலாறு. சோளிங்கபுரத்தில் தொட்டையாசாரியார் என்ற பெயர் கொண்ட வைணவப் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அவர் இந்தப் பெருமாளின் கருடோற்சவத்தைப் போற்றி சுலோக பஞ்சகம் ஒன்று எழுதியவர்.

    ஒவ்வொரு ஆண்டும் அவர் தவறாமல் காஞ்சீபுரம் வந்து கருடோற்சவத்தைக் கண்டு தரிசிப்பார். ஒரு வருடம் அவரால் இயலாமை காரணமாக கருடசேவையைத் தரிசனம் செய்ய காஞ்சீபுரம் வரமுடியவில்லை.

    கருடசேவை அன்று அதிகாலையில் சோளிங்கர் மலையபுரத்தில் இருந்த தக்கான் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கிய இவர் கருடோற்சவத்தைக் காண இயலவில்லை என்று ஏங்கினார். பெருமாள் தன் கருடசேவைக் காட்சியை அவர் இருந்த இடத்திலேயே அருளினார். இதனால்தான் குடையை சாய்த்துப் பிடிக்கிறார்கள்.
    Next Story
    ×