search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனிடம் மனம் சென்றால் பிறகு குடும்ப வாழ்வு நிலைக்குமா?
    X

    இறைவனிடம் மனம் சென்றால் பிறகு குடும்ப வாழ்வு நிலைக்குமா?

    குடும்ப வாழ்க்கையில் காமக் குரோதங்களுடன் போராட வேண்டியுள்ளது. பல்வேறு சமஸ்காரங்களுடன் போரிட வேண்டியுள்ளது. பற்றுக்களுடன் மோத வேண்டியுள்ளது.
    ஸ்ரீராமகிருஷ்ணர்: அதென்ன பேச்சு? குடும்பத்தை விட்டுவிட்டு எங்கே போவாய்?... குருவிடமிருந்து ஞானம் பெற்ற பிறகு ராமபிரான், நான் குடும்ப வாழ்க்கையைத் துறந்துவிடப் போகிறேன் என்றார். அவருக்கு விஷயத்தைப் புரிய வைப்பதற்காக தசரதர் வசிஷ்டரை ராமரிடம் அனுப்பினார். ராமரின் தீவிர வைராக்கியத்தைக் கண்ட வசிஷ்டர் அவரிடம், ‘ராமா! முதலில் என்னுடன் வாதம் செய், பிறகு குடும்ப வாழ்வைத் துறக்கலாம். நான் ஒன்று கேட்கிறேன்.

    ஆமாம் குடும்ப வாழ்க்கை என்பது இறைவனிலிருந்து வேறுபட்டதா, வேறுபட்டதானால் நீ துறந்து செல்லலாம்’ என்றார். ஆனால் இறைவனே உயிர் உலகம் எல்லாமுமாக ஆகியிருப்பதை ராமர் கண்டார். இறைவன் இருப்பதால்தான் மற்ற எல்லாம் இருப்பதாக உணர்கிறோம் என்பது அவருக்குத் தெரிந்தது. அப்படியே மவுனமாகிவிட்டார்.

    குடும்ப வாழ்க்கையில் காமக் குரோதங்களுடன் போராட வேண்டியுள்ளது. பல்வேறு சமஸ்காரங்களுடன் போரிட வேண்டியுள்ளது. பற்றுக்களுடன் மோத வேண்டியுள்ளது. போரைக் கோட்டைக்கு உள்ளிருந்து நடத்துவதே சவுகரியமானது. குடும்பத்தில் இருந்து கொண்டே போர் செய்வது நல்லது. சாப்பாடு கிடைக்கிறது. மனைவி பலவித உதவிகளைச் செய்வாள். கலியுகத்தில் உயிர் உணவைச் சார்ந்துள்ளது. உணவிற்காக ஏழு இடங்களில் அலைவதைவிட ஒரு வீட்டில் கிடைப்பது நல்லது. வீட்டில் இருப்பது, கோட்டைக்குள் இருந்து போர் செய்வது போன்றது.

    குடும்ப வாழ்வில் வைத்திருக்கிறார். அதற்கு என்ன செய்வது? எல்லாவற்றையும் அவரிடம் சமர்ப்பித்துவிடு, அவரிடம் உன்னையே சமர்ப்பணம் செய். அப்படி செய்தால் எந்தக் குழப்பமும் இல்லை. அவரே எல்லாம் செய்கிறார் என்பதை அப்போது காண்பாய். எல்லாம் ராமரின் திருவுளம்.
    Next Story
    ×