search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

    ராமலிங்க சுவாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றம்

    பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் பணகுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.45 மணிக்கு கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் பல்லக்கில் எழுந்தருளல், 11 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    தொடர்ந்து 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் திருநாளான வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தெப்பதிருவிழாவும், 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.
    Next Story
    ×