search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செங்கோட்டை ஆதிபராசக்தி கோவிலில் புஷ்பாஞ்சலி வழிபாடு
    X

    செங்கோட்டை ஆதிபராசக்தி கோவிலில் புஷ்பாஞ்சலி வழிபாடு

    செங்கோட்டை ஆதிபராசக்தி கோவிலில் புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது.
    செங்கோட்டை வடக்குரதவீதியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடந்த நவராத்திரி விழா நிறைவு பெற்றதை முன்னிட்டு புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி அகண்ட ஜோதி ஏற்றப்பட்ட முறைப்படி செங்கோட்டை ஆதிபராசக்தி மன்றத்திலும் அகண்ட ஜோதி ஏற்றப்பட்டிருந்தது.

    நவராத்திரி விழா நாட்களில் அகண்ட ஜோதிவடிவில் அருள் வழங்கிய அன்னை ஆதிபராசக்தியை குளிர்விக்கும் விதத்தில் பக்தர்கள் புஷ்பாஞ்சலி செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பவுர்ணமியை முன்னிட்டு மன்றத்தலைவர் சித்ராசங்கர் தலைமையில் அன்னை ஆதிபராசக்தியின் உருவப்படம் மலர்களால் ஆன அலங்கார மேடையில் வைத்து சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜையினை வேள்விக்குழு இணைசெயலாளர் சக்திராமையா தலைமையில் சஞ்சீவிகுமார் துவக்கி வைத்தார்.

    புஷ்பாஞ்சலி நிறைவு பெற்றதும் ஆன்மிக மேடை நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் திருமலை தலைமையில் சக்திபீட தலைவர் சிவசங்கரநாராயணன் வரவேற்று பேசினார். விழாவிற் கான ஏற்பாடு களை சக்திபீட தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் மன்ற தலைவர் சித்ராசங்கர், பழனியம்மாள்காந்தி, விஜி ஐயப்பன், தனுஷ்கோடி இளைஞர்அணி சக்திரமேஷ், மனோ, மணிவண்ணன், மதிலெட்சுமணன், சூர்யா, ஆகியோருடன் செங் கோட்டை பார்டர், கொட்டா குளம், அழகப்பபுரம், கணக்கப்பிள்ளைவலசை, சீவநல்லூர், இலத்தூர், பெரியபிள்ளைவலசை, பண்பொழி, காலாங்கரை பகுதி பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×