search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 14.5.2019 முதல் 20.5.2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 14.5.2019 முதல் 20.5.2019 வரை

    மே மாதம் 14-ம் தேதியில் இருந்து மே மாதம் 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    14-ந்தேதி (செவ்வாய்) :

    * வாசவி ஜெயந்தி.
    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்.
    * காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உற்சவம், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம், மாலை வேணு கோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (புதன்) :

    * சர்வ ஏகாதசி.
    * சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.
    * காளையார்கோவில் சிவபெருமான், பொய்பிள்ளையை மெய்பிள்ளை ஆக்குதல், இரவு வெள்ளி விருட்ச சேவை.
    * உத்தமர்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம், இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.
    * காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் கோவிலில் ரதம்.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (வியாழன்) :


    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், அப்பன் சன்னிதிக்கு எழுந்தருளி, தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
    * பழனி பாலதண்டாயுதபாணி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
    * காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
    * காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * நரசிம்மர் ஜெயந்தி.
    * மாயவரம் கவுரிமாயூரநாதர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா், நயினார்கோவில் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், உத்தமர்கோவில், திருப்புகளூர், காளையார்கோவில் ஆகிய தலங்களில் ரதம் உலா.
    * பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், வெண்ணெய் தாழி சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோ ரதம், இரவு புஷ்பப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலம்.
    * சமநோக்கு நாள்.



    18-ந்தேதி (சனி) :

    * வைகாசி விசாகம்.
    * பவுர்ணமி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பால்குடக் காட்சி.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள், திருக்கண்ண புரம் சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி, பழனி முருகப்பெருமான் ஆலயங்களில் ரதம் வீதி உலா.
    * திருப்பத்தூர் திருத்தணி நாதர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (ஞாயிறு) :

    * மதுரை கூடலழகர் கோவிலில் ரத ஊர்வலம், இரவு தங்க சீவிகையில் சுவாமி பவனி.
    * காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
    * காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளிக் குதிரையில் வீதி உலா.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (திங்கள்) :

    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம். சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம், புஷ்பக விமானத்தில் சுவாமி வீதி உலா.
    * காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×