search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 26.3.2019 முதல் 1.4.2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 26.3.2019 முதல் 1.4.2019 வரை

    மார்ச் மாதம் 26-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்)

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மர வாகனத்தில் கண்ணாடி அலங்கார சேவை.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    * நத்தம் மாரியம்மன் கோவில் பொங்கல் பெரு விழா, மாலையில் பூக்குழி விழா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தீர்த்தவாரி, தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க சேவை, அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி அனுமன் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.
    * நத்தம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு.
    * சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.
    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு, இரவு சுவாமி தாயாருடன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரத்தில் திருக்காட்சி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி) :

    * தென்திருப்பேரை பெருமாள் ரத உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர வாகனத்தில் பவனி.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் புறப்பாடு.
    * தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.



    30-ந்தேதி (சனி) :

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளி குதிரையிலும், தாயார் அலங்கார படிச்சட்டத்திலும் ஆற்றங்கரையில் வேடர்பரி உற்சவம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பட்சிராஜன் அலங்காரம்.
    * மேல்நோக்கு நாள்.

    31-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * ஒழுகை மங்கலம் மாரியம்மன் கோவில் உற்சவம், அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கோவில் ரத உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
    * தாயமங்கலம் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
    * சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி(திங்கள்) :

    * திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
    * ஒழுகை மங்கலம் மாரியம்மன் யாழி வாகனத்தில் பவனி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் சப்தாவரணம்.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வத பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.
    * சென்னை மல்லீசுவரர் விடாயாற்று உற்சவம்.
    * முகூர்த்தநாள்.
    * மேல்நோக்குநாள்.

    Next Story
    ×