search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 19.3.2019 முதல் 25.3.2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 19.3.2019 முதல் 25.3.2019 வரை

    மார்ச் 19-ம் தேதியில் இருந்து மார்ச் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் வருசாபிஷேகம்.
    * காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்பித்தல், இரவு அறுபத்து மூவருடன் பவனி.
    * நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம், இரவு மின் விளக்கு அலங்கார தாமரையில் புறப்பாடு.
    * கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளிக்குதிரையில் பாரி வேட்டை.
    * திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பவனி.
    * திருப்புல்லாணி ஜெகநாதர் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்) :

    * ஹோலி பண்டிகை
    * பவுர்ணமி விரதம்
    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தங்க தேரோட்டம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.
    * பழனி முருகன் கோவிலில் வெள்ளி ரதம்.
    * ராமகிரிபேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
    * கழுகுமலை முருகப்பெருமான், திருச்சுழி திருமேனிநாதர், கங்கைகொண்டான் வைகுண்டபதி ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரையில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்) :

    * பங்குனி உத்திரம்.
    * தென்திருப்பேரை மகர நெடுங்குழக்காதர், திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம்.
    * சகல முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.
    * மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கு.
    * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் ரத உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * மதுரை கள்ளழகர் மஞ்சள் நீராடல்.
    * ராமகிரிபேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் ரத உற்சவம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும் தசாவதாரக் காட்சி.
    * நத்தம் மாரியம்மன் சந்தனக் குட ஊர்வலம், இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் வசந்த மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சூரசம்ஹாரம், தங்க மயில் வாகனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.



    23-ந்தேதி (சனி) :

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * திருவெள்ளாரை சுவேதாத்திரி நாதர் கோவில் உற்சவம்.
    * கும்பகோணம் சாரங்கபாணி திருக்கல்யாணம்.
    * சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு எண்ணெய் காப்பு.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சுவாமியும் தாயாரும் சூரிய பிரபையிலும் பவனி.
    * திருவெள்ளாரை சுவேதாத்திரி நாதர் கற்பக விருட்ச வாகனத்தில் உலா, இரவு சுவாமியும் அம்பாளும் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்) :

    * திருக்குறுங்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.
    * தென்திருப்பேரை பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத் தேரில் ஊர் வலம், இரவு தங்க மயிலில் வீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு சுவாமி- தாயார் வெள்ளி சேஷ வாகனத்திலும் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    Next Story
    ×