search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 9.10.2018 முதல் 15.10.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 9.10.2018 முதல் 15.10.2018 வரை

    அக்டோபர் 9-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமாக ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    9-ந்தேதி (செவ்வாய்) :

    * பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * சமநோக்கு நாள்.

    10-ந்தேதி (புதன்) :


    * நவராத்திரி ஆரம்பம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் லட்சார்ச்சனை ஆரம்பம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்கார காட்சி.
    * திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (வியாழன்) :

    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * பாபநாசம் சிவபெருமான் பவனி வருதல்.
    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வெள்ளி) :

    * சதுர்த்தி விரதம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.
    * ராமேஸ்வரம் பர்வ தவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * தேரெழுந்தூர், மிலட்டூர் விநாயகப்பெருமான் ஆலயங்களில் சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.



    13-ந்தேதி (சனி) :

    * திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திரு வண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (ஞாயிறு) :

    * சஷ்டி விரதம்.
    * பாபநாசம் சிவபெருமான் ஆலயத்தில் சுவாமி பவனி.
    * இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.
    * சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (திங்கள்) :

    * திருக்கோஷ்டியூர் சவு மிய நாராயணப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.
    * திருவம்பல் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×