search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 10.4.2018 முதல் 16.4.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 10.4.2018 முதல் 16.4.2018 வரை

    ஏப்ரல் 10-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    10-ந்தேதி (செவ்வாய்) :

    * திருவெள்ளாறை சுவேதாத் திரிநாதர் ரத உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல்.
    * சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் வீதி உலா.
    * கரிவலம்வந்த நல்லூர் சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
    * விளாம்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்.
    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்) :

    * அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் பூக்குழி விழா.
    * சமயபுரம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம்.
    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருவெள்ளாறை சுவேதாத் திரிநாதர் தீர்த்தவாரி.
    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்) :

    * சர்வ ஏகாதசி.
    * சமயபுரம் மாரியம்மன் விருட்ச சேவை.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி) :


    * பிரதோஷம்.
    * கோவில்பட்டி பூவண்ணநாதர், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு தாயார் அலங்கார படிச்சட்டத்தில் பவனி.
    * வள்ளிமலை, திருப்போரூர் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் படித் திருவிழா.
    * கீழ்நோக்கு நாள்.



    14-ந்தேதி (சனி) :

    * தமிழ் வருடப்பிறப்பு.
    * மாத சிவராத்திரி.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் அன்னாபிஷேகம்.
    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 கனி அலங்காரம்.
    * திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் பாலாபிஷேகம்.
    * மதுரை மீனாட்சியம்மன் வைர கிரீடத்தில் காட்சி தருதல்.
    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு) :

    * அமாவாசை.
    * திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * சங்கரநயினார் கோவிலில் சுவாமி தங்கப்பல்லக்கில் பவனி.
    * திருத்தணி முருகப்பெருமான் சூரிய பிரபையில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்) :

    * அமாவாசை சோமவாரம்.
    * திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
    * திருச்சி தாயுமானவர் பூத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் உலா.
    * சமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரையில் புறப்பாடு.
    * சீர்காழி சிவபெருமான் புஷ்ப விமானத்தில் பவனி.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×