search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்
    X

    குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்

    கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால் குழந்தை வரம் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    கிருஷ்ண மந்திரம் கூறுவது, கிருஷ்ண நாமம் கூறுவது கலியுகத்தில் புண்ணியம் தரக்கூடிய செயல்களாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குருவாயூர் கிருஷ்ணனை வணங்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருக்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். கிருஷ்ணர் பாதத்தை வீடு முழுவதும் மாக்கோலமாக வரைந்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் பாகவதம் என்ற நூலின், பத்தாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும்.

    நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களையும் பாடலாம். கண்ணனுக்குப் படைத்த நைவேத்யத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதனால் சிறுவரல்& சிறுயர்களின் மனம் குளிரும். அந்த குளர்ந்த வாழ்த்து உங்கள் வயிற்றில் புத்திரபாக்கியத்தை சுமக்கும் பேற்றைத் தரும். இரவில் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் விரைவில் வீட்டில் மழலைக் குரல் கேட்கும்.

    விரதம் இருப்பது எப்படி?

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.
    Next Story
    ×