search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    டொரேண்டோ திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெறும் குரங்கு பொம்மை
    X

    டொரேண்டோ திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெறும் குரங்கு பொம்மை

    விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் நித்திலன் இயக்கத்தில் வெளியான ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் டொரேண்டோ திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற இருக்கிறது. #KuranguBommai
    புளு சாப்யர் என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.

    இந்த அறிவிப்பினை புளு சாப்யர் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள் இடம்பெற்று கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



    முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×