என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`டெர்மினேட்டர் 6': `அவதார்' இயக்குநருடன் இணையும் அர்னால்டு
Byமாலை மலர்25 May 2017 2:41 AM GMT (Updated: 25 May 2017 2:41 AM GMT)
`அவதார்' இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து `டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகத்தில் தான் இணையவிருப்பதாக அர்னால்டு தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தற்போது `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகிறார். `அவதார்' படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த ஐந்து பாகங்களை தற்போது இயக்கி வருகிறார்.
`அவதார்' படத்தை இயக்கும் அதேவேளையில், டெர்மினேட்டர் படத்தின் அடுத்த பாகத்தின் மூலம் அர்னால்டுடன் மீண்டும் இணைய இருக்கிறார். முன்னதாக `டெர்மினேட்டர்' படத்தின் முதல் இரு பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி தயாரித்திருந்தார். இதையடுத்து அடுத்த மூன்று பாகங்களும் வெளியாகியுள்ள நிலையில், `டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகம் தற்போது தயாராக உள்ளது.
இதில் கடைசியாக வெளியான, `டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், `டெர்மினேட்டர்' படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அர்னால்டு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அர்னால்டு இதுகுறித்து தெரிவித்த போது, நான் மீண்டும் வருகிறேன். அவரிடம் (ஜேம்ஸ் கேமரானிடம்) இருக்கும் சில வித்தியாசமான, புதுமையான யோசனைகளுடன் `டெர்மினேட்டர்' படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று தெரிவித்தார்.
`டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகத்தை `டெட்பூல்' படத்தை இயக்கிய ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் டிம் மில்லர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அவதார் அவதார் பாகங்கள் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவதார் 2 அவதார் 3 அவதார் 4 அவதார் 5 ஜேம்ஸ் கேமரூன் அவதார் உலகம் டெர்மினேட்டர் டெர்மினேட்டர் 6 அர்னால்டு டிம் மில்லர் terminator terminator sequals terminator 6 dead pool director tim miller avatar Avatar Sequals release date announced official announcement avatar 2 avatar 3 avatar 4 avatar 5 underwater Avatar world
Next Story
×