search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறியதாக நடிகர் ஜெயராம் மீது புகார்
    X

    அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறியதாக நடிகர் ஜெயராம் மீது புகார்

    அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறி பாடியதாக நடிகர் ஜெயராம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசிடம் இதுகுறித்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் ஏராளமான கட்டுப்பாடு களும் காலம் காலமாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    10 வயதிற்கு மேல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. அதையும் மீறி தடை செய்யப்பட்ட வயதிற் குட்பட்ட பெண்கள் இங்கு சாமி தரிசனம் செய்ததாக அடிக்கடி சர்ச்சை எழுந்து வருகிறது.



    சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த 50 வயதிற்கு உட்பட்ட 2 இளம் பெண்கள் சரிபமலையில் சாமி தரிசனம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள தேவசம்போர்டு விஜிலன்ஸ் அமைப்பு விசாரணை நடத்தியது.

    இதுதொடர்பான விசா ரணை அறிக்கையும் சமீபத் தில் கேரள தேவசம் போர்டு மந்திரி மற்றும் சபரிமலை சிறப்பு ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதில் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மேலும் இந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்று உள்ள இன்னொரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கேரள தொழில் அதிபர் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தபோது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் அன்று சபரி மலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் சபரிமலை கோவில் கலைஞர்கள் இசைக்கும் இசைக்கருவியான ‘இடக்கா’ கருவியை வாங்கி அதை இசைத்து பாட்டுப்பாடி உள்ளார். இது சபரிமலை ஐதீகத்தை மீறிய செயல் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்று தொழில் அதிபருக் காக சபரிமலை அய்யப் பனுக்கு விதிகளை மீறி சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ஜெயராம் சபரிமலை யில் இசைக்கருவி இசைத்து பாட்டுப்பாட அனுமதித்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
    Next Story
    ×