என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்?
Byமாலை மலர்28 March 2017 3:40 AM GMT (Updated: 28 March 2017 3:40 AM GMT)
`வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
`வட சென்னை' படத்தில் தனுஷ் - விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முடியவுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் `வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
முன்னதாக முதற்கட்ட படப்பிடிப்பின் போதே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்த படக்குழு, விஜய் சேதுபதி மார்ச்சில் பங்கேற்பார் என்று கூறியிருந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போவதாலும், மற்ற படங்களில் தான் ஒப்பந்தமாகி இருப்பதாலும் `வடசென்னை' படத்தில் நடிக்க தேதி இல்லை என்று கூறி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
விஜய் சேதுபதி நடிப்பில் 'கவண்' மார்ச் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். 'புரியாத புதிர்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Next Story
×