search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நான் ஏன் காமெடி நடிகரானேன்: ஆனந்த்ராஜ் விளக்கம்
    X

    நான் ஏன் காமெடி நடிகரானேன்: ஆனந்த்ராஜ் விளக்கம்

    தான் ஏன் காமெடியனாக மாறினேன் என்பதற்கு ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதை கீழே பார்ப்போம்.
    90-களில் வில்லனாக தமிழ் சினிமாவில் கலக்கிய ஆனந்த்ராஜ் தற்போது காமெடி நடிகராக மாறிவிட்டார். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இவருடைய காமெடியை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு அந்த படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு காமெடி வேடங்களே குவிந்து வருகிறது.

    தான் ஏன் காமெடி நடிகராக மாறினேன் என்பதற்கு ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்று நடந்த ‘மரகதநாணயம்’ ஆடியோ வெளியீட்டில் மேடையிலேயே கூறிவிட்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று சினிமாவில் ஒரு ஈ வில்லனாக ஆகிவிட்டது. அடுத்த படத்தில் நாய் வில்லனாக ஆகிவிட்டது.



    அதன்பிறகு, பேய்களெல்லாம் இப்போது வில்லன்களாக மாறிவிட்டன. ஆண் பேய்களாக இருந்தாலும் சண்டை போடலாம். பெண் பேய்களாக வருகின்றது. அப்படியிருக்கையில் நாம் ஏன் வில்லனாக இருக்கவேண்டும் என்றுதான் காமெடியனாக மாறிவிட்டேன் என்றார்.

    இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சந்தோஷ் நாராயணன், அருண் ராஜா காமராஜ், ஆதி, கார்த்திக் நரேன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×