search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்
    X

    பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்

    பேஸ்புக்கில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியதாக கார் தரகர் ஒருவர் தமிழ் நடிகர் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சென்னையை சேர்ந்தவர் திலீபன் புகழேந்தி. இவர் பழம்பெரும் கவிஞர் புலமைப்பித்தனின் பேரனும் ஆவர். விரைவில் வெளியாக உள்ள ஒரு தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தள்ள திலீபன் மீது மும்பையை சேர்ந்த கார் தரகர் ரேகன் திவான்ஜி மும்பை, கார் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திலீபன் புகழேந்தி, என் மூலமாக மும்பையில் கார் ஒன்றை வாங்கினார். பின்னர் அந்த கார் வேண்டாம் என கூறி, அதை விற்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து நான் அவரின் காரை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்று கொடுத்தேன். பின்னர் நடிகர் கூடுதலாக ரூ.20 ஆயிரம் கேட்டார். காரை விலைபேசி கொடுத்த பிறகு கூடுதல் பணம்கேட்க முடியாது என அவரிடம் கூறியிருந்தேன்.



    இந்தநிலையில் நடிகரின் பேஸ்புக்கில் என்னைப்பற்றி அவதூறாக செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. தேவையில்லாமல் என்னை பற்றி அவதூறு பரப்பிய நடிகர் திலீபன் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இது குறித்து நடிகர் திலீபன் புகழேந்தி கூறுகையில், “பேஸ்புக் பதிவு குறித்து தெரிந்தவுடன் ரேகன் திவான்ஜியிடம் நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். எனது பேஸ்புக் கணக்கை யாரோ தவறாக பயன்படுத்திவிட்டார்கள். எனது பேஸ்புக் கணக்கை தவறாக பயன்படுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.
    Next Story
    ×