search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலா படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர்
    X

    பாலா படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர்

    பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர் ஒருவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    இயக்குனர் பாலா தற்போது ஜோதிகா-ஜி.வி.பிரகாஷை வைத்து ‘நாச்சியார்’ படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஈயான் ஸ்டுடியோஸ் மற்றும் பாலாவின் பி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ராக்லைன் வெங்கடேஷ் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்தவர். பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் பணியாற்றியுள்ளார். முதன்முறையாக ‘நாச்சியார்’ படம் மூலம் நடிகராக களமிறங்கியிருக்கிறார்.



    ‘நாச்சியார்’ படம் செப்டம்பரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×