search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பழனி கோவிலுக்கு சென்றது விஜய்தானா? கசிந்தது புதிய போட்டோ
    X

    பழனி கோவிலுக்கு சென்றது விஜய்தானா? கசிந்தது புதிய போட்டோ

    பழனி கோவிலுக்கு சென்றது விஜய்தானா? என்பது குறித்த புதிய போட்டோ கசிந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    விஜய் சமீபத்தில் பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்று தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளிவந்தது. அந்த புகைப்படத்தில் முகத்தை மூடியபடி விஜய்யின் தோற்றத்தைப்போலவே ஒருவர் காவி வேஷ்டியுடன் நடந்து வருவது போன்று இருந்தது. இதைப் பார்த்ததும் விஜய்தான் பழனி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக கூறினர்.

    தற்போது, அந்த புகைப்படத்தில் இருந்தது விஜய் இல்லை, வேறொருவர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதன்பிறகே, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
    Next Story
    ×