search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
    X

    ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு

    ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது ரெயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் தற்போது நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.

    இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி  எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். முக்கிய ரெயில் நிலை யங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரெயிலில்  இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கைய சைத்தார்.

    ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் கோடா ரெயில் நிலையத்தில் ரெயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள்  திரண்டதால் நெரிசல் உருவானது.

    நெரிசலின் போது ரெயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதமானது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

    அங்கு கடை வைத்து நடத்தி வரும் விக்ரம்சிங் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது கடை முழுமையாக சேதமானது. பணமும்  திருட்டுபோனது. இது தொடர்பாக அவர் கோடா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஷாருக்கான் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். பொது சொத்துக்களை  சேதப்படுத்துதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குபதிவாகி இருக்கிறது.
    Next Story
    ×