என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இயக்குநர் ஹரிக்கு காரை பரிசாக வழங்கிய சூர்யா: காரணம் இதுதான்!
Byமாலை மலர்15 Feb 2017 7:03 AM GMT (Updated: 15 Feb 2017 7:03 AM GMT)
நடிகர் சூர்யா இயக்குநர் ஹரிக்கு டோயடோ ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார். அதற்கான காரணத்தை கீழே பார்ப்போம்.
சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2' படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெளியான `சி3' படம் நல்ல வசூலை குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொதுவாக சூர்யாவின் படங்களை விரும்பி பார்க்கும் தந்தை சிவக்குமார் அவ்வப்போது பாராட்டுகளையும் தெரிவிப்பாராம். ஆனால் சமீபத்தில் வெளியான `சி3' படத்தை பார்த்த சிவக்குமார் சூர்யாவை கட்டித் தழுவியதாக சூர்யா தெரிவித்துள்ளார். தந்தையின் தழுவல் பெற்ற மகிழ்ச்சியில் சூர்யா, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இயக்குநர் ஹரிக்கு டோயடோ ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார்.
முன்னதாக `பசங்க 2' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
×