என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
100 கோடி வசூலித்து சூர்யாவின் `சி3' புதிய சாதனை
Byமாலை மலர்15 Feb 2017 4:28 AM GMT (Updated: 15 Feb 2017 4:28 AM GMT)
6 நாட்களில் 100 கோடியை வசூலித்து சூர்யாவின் `சி3' புதிய சாதனை படைத்துள்ளது. அதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரைகளில் ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2' படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன்,விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்த படங்களில் `சி3' முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான `24' படம் 18 நாட்களில் 100 கோடி வசூலை தொட்டது குறிப்பிடத்தக்கது.
`சி3' படத்தை, படம் ரிலீசாகும் அதேநாளே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்ட இணையதளம் சவால் விட்டிருந்தது. கருப்பு பண ஒழிப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெளியான `சி3' படம் நல்ல வசூலை குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைச்துள்ளனர்.
மேலும் `சி3' பட வெற்றியை சூர்யா தனது படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டினார்.

Next Story
×