search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஒருவாரத்திற்குள் மன்னிப்பு கேட்க பீட்டாவுக்கு சூர்யா வக்கீல் நோட்டீஸ்
    X

    ஒருவாரத்திற்குள் மன்னிப்பு கேட்க பீட்டாவுக்கு சூர்யா வக்கீல் நோட்டீஸ்

    ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து, சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய `சி3' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது.

    சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டால் சில காளைகளும், சில மனிதர்களும் இறந்து போயுள்ளார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தை தடைசெய்தும் அதை நடத்துவதே மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும், அதற்கு ஆதரவாக பேசுவது அதைவிட கேவலமானது என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சூர்யா அனுப்பிய வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது,

    * தான் ஜல்லிக்கட்டுக்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து வந்ததாகவும், `சி3' படத்திற்கு விளம்பரம் தேடி ஆதரவு தெரிவிக்கவில்லை.

    * முன்னதாக சூர்யா நடித்த `சிங்கம்' முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூர்யா ஏன் `சி3' படத்திற்கு விளம்பரம் தேடப்போகிறார்.

    * பீட்டா அளித்த பேட்டி சூர்யாவை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றுள்ளது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளகியுள்ளார். மேலும் பீட்டாவின் இந்த பேட்டியால் தொடர்ந்து அவருக்கு போனில் தொடர் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    * பீட்டாவின் இத்தகைய பேட்டியால் சூர்யாவின் பேருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது, எனவே இத்தகைய தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்டு ஒருவாரத்திற்குள் பதில் அறிக்கை வெளியிடவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×