என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மாற்றுத் திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்
Byமாலை மலர்31 Oct 2016 8:48 AM GMT (Updated: 31 Oct 2016 8:48 AM GMT)
அஜித் ரசிகர்கள் இந்த தீபாவளியை மாற்றுத் திறனாளிகளுடன் கொண்டாடியுள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், புதிய துணிமணிகள் அணிந்தும் நிறைய பேர் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சிவகாசி, கும்பகோணம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளனர்.
இந்த காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள், மதிய உணவுகள் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுடன் ஆடி, பாடி அவர்களை குஷிபடுத்தவும் செய்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த உதவி பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை ஏற்கெனவே கலைத்துவிட்டார். இருப்பினும், அஜித் பெயரில் இன்னமும் அவரது ரசிகர்கள் பற்பல உதவிகள் செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Next Story
×