search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமெரிக்க தமிழ் சங்கத்தில் பரிசு பெற்ற தமிழ் பாடகி பைரவி
    X

    அமெரிக்க தமிழ் சங்கத்தில் பரிசு பெற்ற தமிழ் பாடகி பைரவி

    அமெரிக்க தமிழ் சங்கத்தில் பாடி தமிழ் பாடகி பைரவி பரிசு பெற்றுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

    கர்நாடக இசை, மெல்லிய இசை, மேற்கத்திய இசைகளை கற்று தங்க பதக்கம் பெற்றவர் பாடகி பைரவி. மன்சூர் அலிகானின் ‘என்னைப்பார் யோகம் வரும்’ படத்தில் ‘அதிர்ஷ்ட கையை விற்பதனிலா’ என்ற தனிப்பாடல் மூலம் பின்னணி பாடகி ஆனார். தொடர்ந்து இளையராஜாவின் வாங்கோன்னா.... வாங்கோன்னா பாடலின் ரீமிக்ஸ் பாடலை பாடினார்.

    தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பாடல்கள் பாடினார். இப்போது அமெரிக்க தமிழர்களின் அழைப்பை ஏற்று அங்கு இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார்.

    இது பற்றி கூறிய பைரவி, “அமெரிக்காவில் கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச இசை விழாவில் பாடி பரிசு பெற்றேன். இப்போது நியூயார்க்கிலுள்ள தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிச்சங்களின் விழாக்களிலும் பாடி வருகிறேன்.

    இந்தியா மற்றும் இந்திய வம்சாவழி பிள்ளைகளுக்கு இசையும் கற்றுக் கொடுக்கிறேன். பின்னணி பாட அழைப்பு வருகிறது. விரைவில் சென்னை திரும்பி பின்னணி பாடல்களை பாட இருக்கிறேன்” என்றார்.

    Next Story
    ×