search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    லண்டன் மியூசியத்தில் பாகுபலி நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்
    X

    லண்டன் மியூசியத்தில் 'பாகுபலி' நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

    'பாகுபலி' நாயகன் பிரபாசுக்கு லண்டன் மியூசியத்தில் ஒரு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    தெலுங்கு சினிமாவின் இளம் நாயகர்களில் ஒருவராக வலம்வந்த பிரபாசை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த படம் என்ற பெருமை 'பாகுபலி' படத்தையே சேரும். கடந்த வருடம் வெளியான 'பாகுபலி' உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் 'பாகுபலி-2' வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், இதுநாள்வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே மெழுகுச்சிலை வைத்த லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியம் தென்னிந்திய நடிகர் பிரபாசுக்கும் தனது மியூசியத்தில் மெழுகுச்சிலை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கும் இயக்குனர் ராஜமௌலி "2017-ம் ஆண்டு பாங்காக் நாட்டில் திறக்கப்படும் பிரபாஸ் சிலை உலகம் முழுவதும் பயணிக்கும்" என மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தென்னிந்திய நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×