search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
    X

    இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி

    இமைக்கா நொடிகள் படத்தில் நாயகன் அதர்வாவுக்கு ஜோடியாக சித்தார்த் பட நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
    'டிமாண்டி காலனி' அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படம் 'இமைக்கா நொடிகள்'. தொடர் ஹிட்களைக் கொடுத்து வரும் நயன்தாரா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். இதனால் 'இமைக்கா நொடிகள்' படத்திற்கு படப்பிடிப்பிற்கு முன்பே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் இரண்டாவது ஹீரோயினாக ராஷி கண்ணாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணாவை சமீபத்தில் சித்தார்த் தனது 'சைத்தான் கா பச்சா' பட நாயகியாக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடிக்க இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அக்டோபர் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

    ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரிக்கிறார்.
    Next Story
    ×