search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்
    X

    டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் டாஸ்மாக் காட்சிகளே இல்லாமல் உருவாகியுள்ளதாம். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த ஒரு ரோடு பிலிமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை முக்கிய சாலைகளில் வைத்து படமாக்கியுள்ளனர். இதற்காக சென்னை ஈசிஆர் ரோடு, பாண்டிச்சேரி, கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.

    எம்.ராஜேஷ் இயக்கும் படமென்றாலே வழக்கமாக ஏதாவது ஒரு டாஸ்மாக் காட்சி இடம்பெறும். ஆனால், இப்படத்தில் ஒரு டாஸ்மாக் காட்சிகள்கூட கிடையாதாம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார்.  
    Next Story
    ×