search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சென்னையில் புகழ்பெற்ற நாகேஷ் திரையரங்கம் பெயரில் புதிய படம்
    X

    சென்னையில் புகழ்பெற்ற நாகேஷ் திரையரங்கம் பெயரில் புதிய படம்

    சென்னையில் புகழ்பெற்ற நாகேஷ் திரையரங்கம் பெயரில் புதிய படம் உருவாகவுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே படிப்போம்...
    மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் தனது சம்பாத்தியத்தில் சென்னை பாண்டிபஜாரில் கடந்த 1984-ஆம் ஆண்டு ஜுன் 27-ந் தேதி ‘நாகேஷ் தியேட்டர்’ என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை தொடங்கினார். இந்த திரையரங்கை மறைந்த முன்னால் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார்.

    வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திரையரங்கம் ஒருகட்டத்தில் திருமண மண்டபமாக மாறியது. இருப்பினும், இன்றைக்கும், அந்த பகுதியில் நாகேஷ் தியேட்டர் பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது. இந்த திரையரங்கை பெருமைப்படுத்தும் வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.

    ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் நடித்த ஆரி இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறாராம். மேலும், காளி வெங்கட்டும் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘அகடம்’ என்ற படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த இசாக் என்பவர் இயக்குகிறார்.

    எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ இசையமைக்ககிறார். இப்படத்திற்கு ‘கபாலி’ படத்திற்கு அரங்கு அமைத்த ராமலிங்கம் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரிக்கிறார். 
    Next Story
    ×