search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நமது திறமையை காட்ட சினிமாதான் வாய்ப்பளிக்கிறது -இயக்குனர் லிங்குசாமி
    X

    நமது திறமையை காட்ட சினிமாதான் வாய்ப்பளிக்கிறது -இயக்குனர் லிங்குசாமி

    நமது திறமையை காட்ட சினிமாதான் வாய்ப்பளிக்கிறது என்று இயக்குனர் லிங்குசாமி பேசியிருக்கிறார். அதுகுறித்து கீழே பார்ப்போம்.

    ‘போங்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லிங்குசாமி “ஒளிப்பதிவாளர் நட்டி எனது நீண்ட கால நண்பர். அவரது படமான ‘சதுரங்க வேட்டை’யை நான் தான் எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றேன். ஒளிப்பதிவாளராக இருந்து நடிகர் ஆகி இருக்கிறார். நான் இயக்குனராக இருந்து தயாரிப்பாளர் ஆகி இருக்கிறேன்.

    பல இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகி இருக்கிறார்கள். பாடகர்கள் நடிகர்களாகி இருக்கிறார்கள்.இப்படி ஒரு துறையிலிருந்து மறு துறைக்கு போங்கு ஆட்டம் நடக்கிறது. இது நல்ல போக்குதான். நம்மிடம் இருக்கும் திறமைகள் அனைத்தையும் காட்டுவதற்கு சினிமா மேடை அமைத்து தருகிறது. ‘போங்கு’ படம் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது. வெற்றி பெறும்” என்றார்.

    நடிகர் பார்த்திபன், “சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் கொஞ்சம் செம்பு கலக்க வேண்டும். அதுதான் போங்கு. நல்ல தண்ணீரில் மீன் வளராது. அதற்கு கொஞ்சம் அழுக்கு வேண்டும். அது தான் போங்கு. வாழ்க்கையின் எல்லா வி‌ஷயத்திலும் போங்கு இருக்கிறது. அதனால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது” என்று பேசினார்.

    விழாவில், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, சிபிராஜ், ரவிமரியா, சிருஷ்டி டாங்கே, பூஜா குமார், மனிஷாஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×