search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்
    X

    இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்

    இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படமான புண்ணியகோடிக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
    உண்மை மிகவும் வலிமையானது என்பதை எடுத்துக் கூறும் விதமாக ‘புண்ணியகோடி’ என்ற பெயரில் சமஸ்கிருத அனிமேஷன் படமொன்றை இயக்குநர் ரவிசங்கர் இயக்கி வருகிறார். உண்மையை மட்டும் பேசும் பசுமாடு ஒன்றின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர்.

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நடிகை ரேவதி ‘யூ-டர்ன்’ புகழ் ரோஜர் நாராயணன் மற்றும் கன்னட மேதை நரசிம்மமுர்த்தி போன்ற பிரபலங்கள் டப்பிங் பேசுகின்றனர். துபாயில் வசிக்கும் ஓவியர் ஷெரின் ஆபிரஹாம் தனது ஓவியங்களை விற்று இப்படத்தின் தயாரிப்புக்கு உதவிட முன்வந்திருக்கிறார்.

    ஷெரின் ஆபிரஹாமின் ஓவிய கண்காட்சி வருகின்ற 12, 13 ம் தேதிகளில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் அரங்கில் நடைபெறுகிறது. ஒரு படத்தின் தயாரிப்பு செலவுக்காக ஓவியக் கண்காட்சி நடப்பது இதுவே முதல்முறையாகும்.


    Next Story
    ×