search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் பறக்கிறது
    X

    தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் பறக்கிறது

    தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கொடி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கொடி'. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

    முதன்முறையாக தனுஷ்-திரிஷா இணைந்து நடித்திருக்கும் 'கொடி' அரசியல் கலந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 29-ம் தேதி தீபாவளியன்று வெளியாகிறது.

    தீபாவளிக்கு ஏற்கெனவே கமலின் ‘விஸ்வரூபம்-2’, கார்த்தியின் 'காஷ்மோரா' மற்றும் விக்ரம் பிரபுவின் 'வீர சிவாஜி' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களுடன் தற்போது தனுஷ் படமும் போட்டியிட களமிறங்குகிறது.

    தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தொடரி' ஆகஸ்ட் 12-ம் வெளியாகிறது. 'தொடரி', 'கொடி' படங்களைத் தொடர்ந்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் இந்த வருடமே வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    நீண்ட இடைவேளைக்குப் பின் தனுஷ் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
    Next Story
    ×