என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது
Byமாலை மலர்30 July 2016 6:36 AM GMT (Updated: 30 July 2016 6:36 AM GMT)
ஆபாச பட நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக உருவாகிறது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான ‘வடகறி’யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர், இப்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். இந்திய அளவில் மோடிக்குப் பிறகு கூகுள் தேடுதலில் அதிகமாக தேடப்படும் நபராக சன்னி லியோன் உள்ளார். தனிநபர்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக உருவாக்குவது பாலிவுட்டில் தற்போது டிரெண்டாக உள்ளது. சச்சின் தெண்டுல்கர், அசாருதீன், டோனி உள்பட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்தில் சன்னி லியோனே நடிக்க உள்ளார்.
அமெரிக்காவில் பிரபல ஆபாச பட நடிகையாக கொடிகட்டி பறந்து, அந்த திரையுலகை விட்டு வெளியேறி, தற்போது பாலிவுட்டில் பிரபலமாகியது வரையிலான சன்னி லியோனின் வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மா இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் 'தேரே பின் லேடன்' படத்தை இயக்கி பிரபலமானவர்.
இந்த படத்தில் சன்னி லியோனின் கணவரான டேனியல் வெபர், படத்திலும் கணவராகவே நடிக்க உள்ளார். சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×